Print this page

“புதுவை முரசு"  குடி அரசு – மதிப்புரை - 04.01.1931

Rate this item
(0 votes)

”புதுவை முரசு” என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவை (புதுச் சேரியில் இருந்து சில மாதங்களாக வெளிவருவது யாவருக்கும் தெரிந்ததாகும். அப்பத்திரிகை ஆரம்பித்ததின்னோக்கமே சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப்பட்டதாகும். 

அப்பத்திரிக்கைக்கு இப்போது திரு.எஸ். குருசாமி பி.ஏ., அவர்கள் ஆசிரியராய் இருக்கச் சம்மதித்து இருக்கின்றார். 

திரு. குருசாமியைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். அவர் பல நாள் குடி அரசு ஆபீசிலும், ரிவோல்ட் பத்திரிகை பிரசுரத்தில் முக்கியஸ்தராகவும் இருந்து வந்தவர், சுயமரியாதை இயக்க கொள்கைகள் முழுவதும் நன்றாய் உணர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய உலக ஞானப் பாண்டித்தியம் உடையவர். இவ்வியக்கத்திற்கே தனது வாழ்நாளை பயன்படுத்த கவலை கொண்டுள்ள ஒரு உண்மைச் சுயமரியாதை வீரர். அவர் தனது சுயமரியாதை உணர்ச்சிக் கேற்ற துணைநலம் கொண்டவர். ஆகவே அப்படிப் பட்ட ஒருவரால் நடத்தப் படும் பத்திரிகை சுயமரியாதை உலகத்திற்கு சிறந்த பயனளிக்கக் கூடியது என்பதில் யாவருக்கும் சந்தேகமிருக்காது. 

ஆகவே அப்பத்திரிகையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியது நாட்டின் சுயமரியாதையில் பற்றுள்ளவர்கள் கடமையாகும். 

சந்தா வருஷம் 1-க்கு உள்நாட்டுக்கு ரூ.30-0

வெளிநாட்டுக்கு ரூ.5-0-0

ஆயுள் சந்தா ரூ 30-0-0 

விலாசம் :-“புதுவை முரசு” காரியாலயம்,

நெ.4லல்லி தொலாந்தா வீதி,

புதுச்சேரி, 5.1.

குடி அரசு – மதிப்புரை - 04.01.1931

Read 28 times